Prayer

இறைவா!

அமைதியின் தூதுவனாய் என்னைப் பயன்படுத்தும்.
பகையுள்ள இடத்தில் பாசத்தையும்
மனவேதனையுள்ள இடத்தில் மன்னிப்பையும்
ஐயமுள்ள சூழலில் விசுவாசத்தையும்
அவநம்பிகையுள்ள மனத்தில் நம்பிக்கையையும்
இருள்சூழ்ந்த இடத்தில் ஒளியையும்
துயரம் நிறைந்த உள்ளத்தில் மகிழ்ச்சியையும்
வழங்கிட, எனக்கு அருள் புரியும்.


ஓ! தெய்வீக குருவே!!
ஆறுதல் பெறுவதை விட ஆறுதல் அளிக்கவும்
பிறர் என்னைப் புரிந்து கொள்ள விரும்புவதை விட
பிறரைப் புரிந்து கொள்ளவும்
பிறருடைய அன்பை அடைய ஆசிப்பதை விட
பிறருக்கு அன்பை அளிக்கவும்
எனக்கு அருள்வீராக! ஏனெனில்,
கொடுக்கும் பொழுது மிகுதியாகப் பெறுகிறோம்,
மன்னிக்கும் பொழுது, மன்னிப்பை அடைகிறோம்
மரிக்கும் பொழுது, நித்திய வாழ்விற்குப் பிறக்கிறோம்
எனவே, சுயநலமற்ற வாழ்வில் ,அமைதியை அடைகிறோம்.